Saturday, January 9, 2021

பெண்ணியம்

பெண்ணியம் பேசும் பெரியார்களே!!
பெண்ணியம் இதுதான் என்று உணர்த்திவிடுங்கள்??
நீங்கள் இதுவரை பேனிக்காத்த பெண்ணியத்தின் உண்மைகளை??
உரைநடையில் பேசும் 
பெண்ணியத்தை எப்போது நடைமுறையில் பயன்படுத்த முன்வருவீர்கள்??
காலங்கள் வேண்டுமா???
கலங்கிய பெண்ணின் கண்ணீரைத் துடைக்க??
பெண்ணை வீட்டுக்குள் வைத்து
பிறபாலினத்தோடு பழகாமல் பூட்டொன்று 
போட்டு வைப்பதா பெண்ணியம் ??படிப்பு  அளித்தும் அவளை 
பாதியில் திருமணம் 
செய்து வைப்பாதா பெண்ணியம்???
என் சாதி தான் பெரிது ,சிறிது  என்று உயிரில்லா சாதிக்கு கொடுக்கும் 
மதிப்புக் கூட பெண் சாதிக்கு கொடுப்பதில்லையே ஏன்??
இது தான் உங்கள் பெண்ணியமா???
என்று ஒவ்வொரு பெண்ணும் சரிசமம் என்று எண்ணி 
அவளை அவளாக 
 வாழ வழி தந்து 
இரவில்  தனியாக 
நடமாட வாய்ப்பு வருகிறதோ அதுவே
உண்மையில் பெண்ணியம்!!
பெண்ணியம் பேசும் பெரியார்களே 
இதை நீங்கள் செய்தால் அதுவே 
உங்களுக்கு கிடைத்த சிறந்த  பொக்கிஷம்.

No comments:

Post a Comment