Monday, January 31, 2022

சிதறியதே!!

உறங்காமல்
உரையாடிய 
உரையாடலும்!!
உனக்கு நான் எனக்கு நீ 
என்று செய்த‌ உறுதியும்
உடன் அமர்ந்து பேசிய
 எதிர்கால கணவுகளும்.
சிரித்த நாட்களும்
சிதறியதே!!
சிலர்மீது நீ கொண்ட
மோகத்தால்!!

Sunday, January 30, 2022

தாங்கிகொள்வேன்!!

தாங்குகிறேன் என்பதற்காக 
தாங்க முடியாத பாரங்களை 
தரும் இறைவா கூடவே
என்னை தாங்கிக்கொள்ளும்
இனையையும் கொடு!!

கடவுச்சொல்!!

உன் வாயார நீ 
எத்தனை கடுஞ்சொல் பேசினாலும்  
என்றும் என் வாழ்வின்
 கடவுச்சொல் நீயடி(டா)!!

Saturday, January 29, 2022

வாராயோ!!

வரியோ வாசகமோ 
வாராயோ ??
வருணிப்பது 
அனைத்தும் 
உன்னை நினைத்தே !!
வாராயோ???
காதல் தாராயோ???
-

Friday, January 28, 2022

தவிக்கிறேனே!!

தாயின்றி குழந்தை தவிக்குமாம்
அதுப்போல் நீயின்றி நான் தவிக்கிறேனே தெரியவில்லை உனக்கு!!

Wednesday, January 19, 2022

இதயமே!!

இருந்த ஒர் இதயம் ❤️
இரு இதயமாக🤰 
காரணம் 
உன் இதயத்தில் 
நீ தந்த இடமே!!👩‍❤️‍👨

அன்பில் அவன்

அன்பின் வெளிப்பாடு அவள் என்றால் ??
அந்த அன்பின் அடையாளம் அவன் !!

Saturday, January 8, 2022

கண்ணே!!!

சண்டைகளின் இடையே 
அவனிடம்  சண்டை செய்யும் அவளின் கண்களைக் கண்டு அவன் 
சரணடைந்தான்!!

Friday, January 7, 2022

விரல் போதும்!!

குளிரும் பனியையும்
கொளுத்தும் வெயிலையும்
அடிக்கும் காற்றையும் என
அனைத்து சூழலையும் கடக்க 
எனக்கு உன் ஒரு விரல் போதுமே!!!


இரகசியமே!!

நீயிருக்கும் வாழ்வு 
குறையற்ற செல்வம் 
போன்றது எமக்கு !!!
என் இரகசியத்தின் சாவி 
இன்று முதல் உமக்கு!!
வாங்கிக்கொள்!!!!!
என் வாழ்வின் இரகசியமே!!!!

Wednesday, January 5, 2022

அவள்!!

காயங்கள் யாவும்
இனிக்கின்றதே ??
காரணம்
அவள் தந்தவை!!

தேடித்தரும்

கலங்காதே 
மனிதா கலங்காதே 
காலம் கட்டாயம்
ஒரு நாள்
உன் வழியை தேடித்தரும்!!

Monday, January 3, 2022

கற்றல்

அதிகம் கற்ப்பது
கர்வத்தை காட்டுவதற்கு அல்ல
கற்றதை அதிகம் பகிர்வதற்கே!!

Sunday, January 2, 2022

காதல் புத்தகம்!!

ஒரு பக்கம் நீ,
மறுப்பக்கம் நான் ,
இருப்பக்கங்களிலும் நாம் ,
நம் காதல் புத்தகத்தில் மட்டும் !!!

Saturday, January 1, 2022

அவனது அவள் !!!

விலாசம் வேண்டாம்
வீசும் காற்று போதும் 
அவள் வரும் வருகையை 
அவனுக்கு உரைக்க!!!
காரணம் ??
அவள் அவனது அவள்!!!