Friday, November 25, 2022

தொலைத்தூர காதல்!!

நேற்று வரை
தள்ளி இருந்த
தூரம் போதும்!!
உற்று உற்று
தொலைபேசியில்
உன்னை
பார்த்தது
 போதும்!!
சந்திக்கும் 
நாளை 
எண்ணி 
எண்ணி
தவித்தது 
போதும்!!
எப்போது 
வருவாய் 
என்ற
புலம்பல் 
போதும்!!
மறைத்து
மறைத்து
அனுப்பிய
குறுஞ்செய்தி
போதும்!!
போதும் 
எல்லாம் 
போதும் !!
காசு வேண்டாம்
காதல் போதும் !!
காதிற்கு கம்மல்
வேண்டாம்
கைக்கோர்க்க 
உன் கைகள்
போதும்!!!
போதும் 
எனக்கு 
நீ போதும் 
எப்போதும் !!
கிளம்பிவா 
என்றும் 
உனக்காக
நான்
என்கிறது
இந்த 
தொலைத்தூர காதல்!!








Tuesday, November 1, 2022

அழகி!!

நான் அழகென்று 
அறிந்ததே 
அன்பே நீ அழகி 
என்கிற போது தான்!!

முகவரியே!!

எழுத்து ஒன்று தா 
எழுத !!
நீயின்றி நான் பிழையாக இருப்பதை திருத்த 
என் பெயருக்கு முன் பெயரை முகவரியாக!!

கொஞ்சம் அழகு!!

கொஞ்சம் தமிழும்
தொற்று போகிறது
தங்மே நீ கொஞ்சம் 
அழகை பார்த்து!!

அந்த நிலவும்!!

அந்த நிலவும் ஏங்கும்
அவனை போல் காதலன் எனக்கில்லையே என்று , 
உன்னை பார்க்கும் போது மட்டும்❤️

காதலின் சுவாரசியம்!!

காதலின் சுவாரசியம்
என்ன தெரியுமா ???
சண்டையிடும் போது
 சமாதானமும் இல்லை !!
சண்டையிட்ட  பின்
சங்கடமும் இல்லை!!