Monday, February 21, 2022

கதைப்பது அவசியமே!!

காதலில் கதைப்பது மிகவும் முக்கியமான ஒன்று, கதைக்கா  காதல் கடலில் கலந்த உப்பைப் போல் என்றும் கறித்துக்கொண்டே இருக்கும். அதனால் காதலில் கதைப்பது அவசியமே !!! ...

காதல் போதும்

காயம் வேண்டாம்
காதல் போதும் என்றேன்
அவள் தந்த அளவற்ற
காயங்களின் வடு ஆறிய பிறகும்
அவள் காதலுக்காக !!

Sunday, February 20, 2022

வெற்றுமை!!

நீ இருந்த போது-வேற்றுமையில் ஒற்றுமை!!
நீ இல்லாத போது- ஒற்றுமையில் வேற்றுமை!!!

Thursday, February 17, 2022

என்று மாறுமோ!!

ஒவ்வொரு ஏமாற்றமும்
ஆசைபடாதே என்கிறது 
ஆனாலும் மாறாத மனம் !!
என்று மாறுமோ இந்நிலை??


Tuesday, February 15, 2022

புரிந்துக் கொண்டேன் !!

விரல் பிடிக்க வந்தாய் 
விலகிப்போ என்றேன் 
விசியம் என்னவென்றாய்
வியப்படைய நீ ஏதும் 
செய்யவில்லை என்றேன் !!
வித்தியாசமாக செய்து 
வியப்பில் ஆழ்த்தி 
விரலை பிடித்து 
விலகிப்போகாதே என்று 
என்னையே சொல்ல வைத்தாய்!!
உனக்கென்ன என்மேல் அவ்வளவு என்றேன் -உன் முன் எனக்கு அனைத்தும் இவ்வளவு என்றாய்!!
அப்போது புரிந்துக் கொண்டேன் 
முதுமையிலும் என்னோடு நீயே
இருப்பாய் என்று!!







Sunday, February 13, 2022

காதலர் தினம்

காதலின் வலியை 
வரிகளால் உணர்த்தமுடியும்
என்றால் அப்போது நானும்
அவ்வழியிலயே என் காதலையும்
உன்னிடத்தில் உணர்த்த விரும்புகிறேன்-இப்படிக்கு 
உனக்கான காதல்!!!

Wednesday, February 9, 2022

வித்தகன்

உன்னிடம் அனைத்துமே
 அறமாக‌ இருக்கும் 
என்பதன் அடையாளமாய்,
 மோதிரமாய் விரலில் 
 விளாயாடும்  
 வித்தகனடி நான்

Monday, February 7, 2022

நீயும் சொன்னாய்

காதலர் தினத்தன்று
காதலை சொல்லலாம்
என்று வந்தேன்
வந்தவனிடம்
நீயும் சொன்னாய்
காதலை!!
இதயம் நான் தருகிறேன்
என்றேன்!!
இதயம் தந்தவெனென்று
வேறொருவரை காட்டினாய்
விரக்தியில் வீடு திரும்பினேன்
இதயமற்றவனாக!!

ரோஜா!!

ராஜாவின் ரோஜா
இராணியை தேட
ரோஜாவை தன்
தலையில் சுட 
இரானியும் இராஜாவை நாட
ரோஜாவாக மலர்ந்து 
அவர்களின் காதல்!!!

Sunday, February 6, 2022

எழுந்து வா!!

எழுந்ததும் எழுத வா
என்றழைக்கும் 
எழுத்துக்களே‌
என் எதிர்காலமும்
நீங்கள் என்றானது 
அதனால்
ஒருபோதும்
என்னை பிரியாதிர்கள்
உங்களை நான்
எழுதிட வேண்டும்
என்றென்றும்!!

என் தங்கமே!!

தவமேதும் இல்லை 
வரமாய் வந்தவனே
தவிக்கின்றேன் 
எப்போது உன் தாரமாவேன் என்று 
என் தங்கமே!!

Friday, February 4, 2022

தாய்மாமன்!!

தாய்க்கு பின் தாரம் 
என்பதுபோல் தான் 
தாயிக்கு முன் தாய்மாமன் 
என்பதையும் மறவாதே!!!!

Tuesday, February 1, 2022

நா.முத்துக்குமார்!!

வரிகள் எழுத 
வழிவகுத்தவனே!!
கவிகள் கோர்க்க
உன் பாடலை 
செவியில் கேட்க்கவைத்தவனே!!
நீ எங்கே போனாய்???
இன்னும் எத்தனை வரிகள்
நான் எழுதினாலும் 
வாசித்து காட்ட நீ இல்லையே 
உன்னால் முளாத்த காளான் நான் 
உனக்னெ நான் எழுதிய வரிகளை 
உன்னிடம் வாசிக்க விரும்புகிறேன்
வாராயா நா.முத்துகுமரனே!!!!!

மகிழ்வே!!

மகிழ்வுடன் நான்
மகிழ்விக்க நீ 
புரியவில்லையா??
என் மகிழ்வே நீதானடி(டா)!!