தாளம் தட்ட, மேளம் கொட்ட
ஊரு கூட , ஓர் இடமில்லாமல்
வீடு நிறைய சனம் சேர
உனக்கு பின் பிறந்தவள்
காத்திருந்த நாள் வர!!
தாலிக்கட்டியவனும்,
தனக்கு முன் தாய்பால் குடித்தவனும்
தகராறு போட்டாலும்!!
தான் பெற்ற பிள்ளைக்கு சீர் சுமந்து
நீ வருவாய் என காத்திருக்கும்
உன் தங்கையின் மனம் குளிர!!
எமக்கு தாய்மாமன் ,சீர் சுமந்து வாருமயா ?
ஆயிரம் தான் நீ பெற்ற மகனும்
அவர் பெற்ற மகனான உன் பேரனும்,
சீர் சுமந்து வந்தாலும்!!
தாய்மாமன் நீ இல்லாமல்,
நான் தவிக்கும் தவிப்பு
உமக்கு கேட்குதாயா??
எழுந்து வாருமயா??
நீ இருக்கும் போது தெரியல
உன் இறப்பின் பின் தான் தோன்றுகிறது
ஒரு முறை தாய்மாமனாக நீ சீர் சுமந்து
வந்தால் எப்படி இருக்கும் என்று !!
எழுந்து வாருமயா !! எமக்கு சீர் கொண்டு வாருமயா!!..
No comments:
Post a Comment