பிஞ்சுமனசுகாரனடி நான்
கொஞ்சம் சொல்லுன்னு
நான் கேட்க !!!
கெஞ்சி நில்லுனு நீ போக
சுத்தி நிப்பவனெலாம்
என்ன பத்தி ஏளனமா
நினைப்பானு நீ நினைக்காம
என்ன நின்ன இடத்துலயே விட்டுப்புட்டு!!
சொல்லால கொண்ணுப்புட்டு
அத்தான அம்போனுவிட்டுப்புட்டு
அப்பனோட அப்படியே போனவளே
அத்தனையும் தாங்கிட்டேன்!
நீ வாடான்னு சொல்லிருந்தா
நிக்காம வீதி தேடி வந்துருப்பேன்
நீ போடானு சொல்லிப்புட்ட
விதியேனு நிக்குறேனிப்ப!!!
No comments:
Post a Comment