Friday, April 22, 2022

கனா!!

கனா கண்டவை அனைத்தும்
நிஜமாகும் தருவாயில்
நினைவாக போனாயடி!!!

Wednesday, April 20, 2022

வளரும் வரை தெரியவில்லை

வளரும் வரை தெரியவில்லை
வளர்கின்ற போதே 
தெரிகிறது
வளர்த்தவர்களின்
கடிணமும் கஷ்டமும்

சொல்

எட்டி இருக்கும் 
நீயும் நானும்
இதயத்தால் இணைந்திருக்க 
இதழால் இணைந்தே இருக்க வேண்டுமா 
சொல்
நாம் காதலர்கள் என அறிவிக்க ??

Friday, April 15, 2022

தொடர்

பிரிந்த பின்பும்
தொடர நினைக்கிறது
நினைவுகளான நம் 
நாட்களை நிஜங்களில்!!

பிரிவும் சுகமே

பிரிவின் முன் 
தெரிந்திரிந்தால்
பிரியாமலாவது இருந்திருப்பேன்
என்ற உணர்வு வரும் வரை
பிரிவும் சுகமே!!

Thursday, April 14, 2022

நம் காதல்

நிலவாக நான்
மழையாக நீ 
மலராக நம் காதல்!!

நாமம்

நான் மோகம் கொண்டது
காமத்தின் மேல் அல்ல
உன் நாமமத்தின் மேல் மட்டுமே!!

Wednesday, April 13, 2022

தெரிகிறது!!

சிரிக்கும் தருவாயில் தான்
தெரிகிறது உண்மையில்
நான் சிரித்த நாட்கள் 
உன்னோடு இருந்தபோதென்று!!!

மறுகின்ற காகிதம்

காகிதங்கள் ஏற்க‌‌  மறுக்கிறது
அன்று காதலுடன் உனக்கு 
எழுதிய வார்த்தைகளை 
இன்று எழுதாததால்!!

Monday, April 11, 2022

குறுஞ்செய்திகள்

வேண்டாம் என்றாலும்
வேண்டும் என்று 
நினைக்க வைக்கிறது
நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்!!!

வேண்டும் என்று நான்

வேண்டாம் என்று
விட்டு சென்ற பின்பும்
வேண்டும் என்று முன்பு
நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்
சொல்கிறது என்னிடம்
எப்போது நீ  வந்து 
பார்த்தாலும் அப்படியே இருப்பேன்
கலங்காதே காதலுடன் நான் இருக்கிறேன் என்றது!!!


மெய்யாக நீ

காதில் கேட்கும் அத்தனையும்
பொய்யாக இருப்பினும்
காதலிக்கும் நீ 
மெய்யாக இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
காதலுடன் நான்!!!