Sunday, October 30, 2022

தோற்றுப்போன காதலன்!!

மூன்று முறை 
முயற்சித்தும் 
உன் கழுத்தில்
மூன்று முடிச்சு
போட முடியவில்லை
அதனால் இன்று
என் கழுத்தில் ‌
போட்டுக்கொள்கிறேன்
என்றான் 
தூக்கிட இருக்கும்
தோற்றுப்போன காதலன்!!


Saturday, October 29, 2022

நிலவே!!

நிலவை காட்டி
சோறு ஊட்ட
ஆசையில்லை
நம் பிள்ளைகக்கு ,
நிலவைப் போல்
அழகாக என்னை
நீ பார்த்துக்
கொள்வதைக் கூறி
சோறு ஊட்டுவேன் !!

Friday, October 28, 2022

பெண்ணே!!

பொன் மீதும்
 ஆசையில்லை,
பெண் மீதும் 
ஆசையில்லை,
பெண்ணே!!
 உன் பொன்னான
கண்களை கானும் வரை !!

Thursday, October 27, 2022

இதயத்தோடு வைத்துக் கொள்!!

உனக்கான காதல் முத்தங்களை
இனையத்தில் அனுப்புகிறேன்
இதயத்தோடு வைத்துக் கொள்
இணையும் போது இதழால் பெற்றுக் கொள்கிறேன் !!

தாய்மாமன்!!

தாளம் தட்ட, மேளம் கொட்ட
ஊரு கூட‌ , ஓர் இடமில்லாமல்
வீடு நிறைய சனம் சேர
உனக்கு பின் பிறந்தவள்
காத்திருந்த நாள் வர!!
தாலிக்கட்டியவனும்,
தனக்கு முன் தாய்பால் குடித்தவனும்
தகராறு போட்டாலும்!!
தான் பெற்ற பிள்ளைக்கு சீர் சுமந்து
 நீ வருவாய் என காத்திருக்கும்
உன் தங்கையின் மனம் குளிர!!
எமக்கு தாய்மாமன் ,சீர் சுமந்து வாருமயா ?
ஆயிரம் தான் நீ பெற்ற மகனும்
அவர் பெற்ற மகனான உன் பேரனும்,
சீர் சுமந்து வந்தாலும்!!
தாய்மாமன் நீ இல்லாமல்,
 நான் தவிக்கும் தவிப்பு
உமக்கு கேட்குதாயா??
எழுந்து வாருமயா??
நீ இருக்கும் போது தெரியல
உன் இறப்பின் பின் தான் தோன்றுகிறது
ஒரு முறை தாய்மாமனாக நீ சீர் சுமந்து
வந்தால் எப்படி இருக்கும் என்று !!
எழுந்து வாருமயா !! எமக்கு சீர் கொண்டு வாருமயா!!..

Thursday, October 20, 2022

உனக்காகவே!!

மிஞ்சியதும் 
அஞ்சுவதும்
உனக்காகவே!!
காரணம் ஏசாமல் 
என்னை நேசிக்கிறாய்!!

Wednesday, October 19, 2022

ஏற்கா இதயம்

இல்லாத போது 
இருக்குறது 
என்று நினைத்து 
அப்போது  ஏற்ற இதயம் !! 
இருந்ததை இல்லை என்று
இப்போது ஏற்க மறுக்கிறது!!!

Saturday, October 15, 2022

நந்தனின் நிலா!!

நம்ம எல்லாருக்குமே ஒரு கனவு இருக்கும், அது மிகப்பெரிய நிறைவேறாத ஆசையாக கூட இருக்கும் ,சிலர் வாழ்க்கையில அது நிறைவேறி இருக்கும் ,சிலர் வாழ்க்கையில் அது நிறைவேறி இருக்காது ,சிலர் வாழ்க்கையில் அது ஏக்கமாகவே இருக்கும் அது என்ன தெரியுமா ?
நமக்காக ஒருத்தர் ,நம்மளுக்காகவே ஒருத்தர் ,நம்மள பாத்துக்கவே ஒருத்தர், நமக்கு என்ன வேணும்னு பார்த்து கேட்டு தெரிஞ்சு பார்த்து பார்த்து பண்ற ஒருத்தர் வேணுன்னு நம்ம எல்லாருமே நினைப்போம் . அது நம்ம எல்லாத்துக்குமே இருக்க கூடிய ஆசைதான், பலரோட வாழ்க்கையில இது நிறைவேறாத ஆசையாக போய்விடுகிறது. ஒரு சிலர் வாழ்க்கையில் மட்டும்தான் இது கனவா மட்டும் இல்லாம நினைவாகவும், ஆசையாக மட்டுமில்லாமல் நிறைவேறுன ஆசையாகவும் இருக்குது .அப்படி நம்ம நந்தனோட வாழ்க்கையில வந்த பொண்ணு தான் நிலா. ஆனா இப்படி ஒரு ஆசையும் கனவும் இல்லாம சுத்திட்டு திரிகிற பையன் தான் நம்ம நந்தன் . இது கனவாகவே இருந்தாலும் எனக்கு வேண்டாம், ஆசை நிறைவேறுனாலும் எனக்கு வேண்டாம் . இப்படி ஒரு கனவு  எனக்கு வேண்டவே வேண்டாம் என்கிற ஒரு சிடுமூஞ்சி பையன் தான் நம்ம நந்தன்.
 இல்ல இல்ல உன் வாழ்க்கையில எப்பவுமே நான் வருவேன் , உன் கூடவே நான் இருப்பேன் நீ வேண்டாம்னு சொன்னா என்ன உனக்காக நான் இருப்பேன் அப்படின்னு கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு அவன் பக்கத்திலேயே இருந்தாலும் கொஞ்சம் தூரமா தள்ளி இருந்து அவனை மட்டுமே நினைச்சுட்டு அவனுக்காக மட்டுமே வாழ்ற ஒரு பொண்ணு தான் நம்ம நிலா .
என்ன இது இங்கே எத்தனையோ பேரு பொண்ணு கிடைக்காம அலைஞ்சுட்டு இருக்காங்களே இவனா ஏன் இப்படி பண்றான் அப்படி என்ன , அப்படின்னு நீங்க எல்லாருமே நினைப்பீங்க,  சரி வாங்க கதைக்குள்ள போலாம் அப்படி என்னதான் ஆச்சு , எப்படி இந்த ஜோடி   எப்படி சேர்ந்துச்சு ,அப்படிங்கிறத  பார்க்கலாம் நந்தனுக்கு , நந்தன் நிலானு‌  சேர்த்து சொன்னாலே பிடிக்காது ஆனா நம்ம நிலாவுக்கு நந்தனிலான்னு சேர்த்து யாராச்சும் சொன்னா போதும் அவங்கள கட்டி புடிச்சு முத்தமே கொடுத்திடுவா, அவளோ புடிக்கும் . நந்தன் நிலா இவங்க ரெண்டு பேருமே பக்கா ஜோடிங்க ஆபீஸே அவங்கள ஓட்டும் நீங்க ரெண்டு பேரு தான் காதலிக்கிறீர்களே சொல்லி தொலைக்க வேண்டியது தானே ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க , ஆனா ரெண்டு பேருமே அச்சு அடிச்ச மாதிரி ஒரே மாதிரி பதில் சொல்லுவாங்க சொல்லாத வரைக்கும் தான் காதல் அழகுன்னு அந்த சொல்லாத காதலோட அழகு எவ்வளவு தூரம் போயி அதை எப்படி சொல்லி முடிச்சு அந்த அழகான காதல்ல இவங்க ரெண்டு பேரும் கை புடிச்சாங்க அப்படிங்கறது பத்தி தான் இந்த கதையில நம்ம பாக்க போறோம் அதுக்கு முன்னாடி வாங்க ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடி இவங்க வாழ்க்கைல என்ன நடந்துச்சு அப்படிங்குறத பாத்துட்டு வந்துடலாம்.
 ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த கால் சென்டர்ல ரெண்டு பேரும் ஒரே நாள்ல வேலை சேர்ந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கு ஒரே வயசு தான், ரெண்டு பேத்தோட சீட்டும் பக்கத்துல பக்கத்துல தான், இப்போ இப்படி சிடுமூஞ்சியா இருக்கிற நந்தன் அப்போ நிலா பின்னாடியே சுத்தி வந்தத பத்தி தான் இந்த ஏழு வருஷத்துக்கு முன்னாடி போய் நம்ம பாக்க போறோம். வாங்க வாங்க கதைக்குள்ள போலாம் நிலாவ பார்த்த உடனே நிலாவே வா!! நில்லாமல் வா !!  என்கிட்டயே வா அப்படின்னு நிலாவ பார்த்த அன்னைக்கே மனசுக்குள்ள நினைச்சு நம்ம நந்தன் சார் காதல விழுந்துட்டாரு நிலா மட்டும் என்ன சும்மாவா? நிலாக்கும் நந்தன பார்த்து அன்னைக்கே பிடிச்சுடுச்சு ஆனா அவளும் காட்டிக்கல பக்கத்து பக்கத்து சீட்டு தான் நந்தன் நிலாவ பார்க்காத மாதிரியே அவன் வேலையை மட்டும் பார்க்கிற மாதிரியே ஒரு கண்ணுல நிலாவை பார்த்துக்கிட்டே அவன் வேலையை பார்த்தான். இது நம்ம நிலாவுக்கும் தெரியும் ஆனால் அவ காட்டிக்கில்ல ஏன்னா நம்ம பொண்ணுங்க சும்மா ஒரு பையன் பார்த்தாலே நம்ம மட்டும் தான் அழகு நெனச்சிட்டு அவன சுத்த விடுவாங்க சூப்பரான ஒரு பையன் பாத்தா எப்படி சும்மா இருப்பாங்களா நம்ம நிலாவும் அப்படித்தான் அவனை கண்டுக்காத மாதிரியே வேலை பார்த்தா இப்படியே காலையிலிருந்து மதியானம் வரைக்கும் போச்சு மதியானம் ஆனதும் நம்ம நந்தன் பைய நீலா அவன சாப்பிட கூப்பிடுவானு  நினைச்சான் ஆனா நிலா அவனை கூப்பிடல ஏன் தெரியுமா இன்னிக்கு நிலாவுக்கு புடிச்ச பிரியாணி கொண்டு வந்து இருந்தா அவனை கூப்பிட்டா அவனுக்கு கொடுக்கணும்னு காரணத்தினால அவனை கூப்பிடாமயே போயிட்டா நந்தனுக்கும்  இவ கூப்பிட மாட்டான்னு தெரிஞ்சிருச்சு அவனும் போய் சாப்பிட்டு திரும்ப வேலையில் வந்து உட்கார்ந்தான்.
 திருப்பி அதே மாதிரி காலையில எப்படி இருந்துச்சோ அதே மாதிரியே நிலாவ பார்த்துகிட்டு வேலையை பார்த்தான்.ஒண்ணுமே தெரியாத மாதிரியே வேலையை பார்த்தான். அப்போ நிலா , நந்தன் இன்னைக்கு முதல் நாள் எப்படி போச்சுன்னு கேட்டா அப்போ நந்தன் மனசுக்குள்ளேயே அம்மு உன்ன பார்த்துக்கிட்டே தாண்டி போச்சு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனால் அதை நிலா கிட்ட சொல்ல முடியாதுல்ல நிலா கிட்ட உடனே நிலா மேடம் இன்னிக்கு முதல் நாள் ரொம்ப நல்லாவே போச்சு அப்படின்னு சொன்னா நிலாவுக்கு தெரியும் நந்தன் அவ்ளேதான் பார்த்துக்கிட்டு இருந்தானு அவளும் மனசுக்குள்ள  டேய் பொறுக்கி என்கிட்டே பொய் சொல்றியா நினைச்சுக்கிட்டே சிரிச்சிட்டு நாளைக்கு பார்ப்போம் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா.
 இரண்டு பேருமே அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க .நிலா நந்தன் நினைச்சுகிட்டு இருந்தா ஒரு டூ மினிட்ஸ், அப்போ தன்ன அறியாத சிரிப்பு வந்துச்சு அவளுக்கு ,நிலா மேடம்மாமே  நிலா மேடம் அப்படின்னு சொல்லி சிரிச்சிட்டு அவ வேலையை பார்க்க போய்ட்டா.
 நந்னுக்கு வீட்டுக்கு போனதுல இருந்து நிலாவோட  நியாபகம் தான். நிலா கிட்ட நம்பராவது வாங்கிக்கலாம்னு புழம்பி கொண்டு இருந்தான் .அப்போ கரெக்டா போனுக்கு ஒரு மெசேஜ் வந்துச்சு நந்தன் சார் என்ன பண்றீங்கனு, அவன் கரெக்டா அது நிலா தான் தெரிஞ்சிக்கிட்டு நிலா மேடம் சொல்லுங்க அப்படின்னு சொன்னா உடனே நிலாவும் எப்படி நீங்க என்ன கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க, இந்த உலகத்திலேயே எனக்கு மரியாதை கொடுக்கிறது நீங்கதானேனு இவனும் கடலை போட ஆரம்பிச்சான் எல்லா புரிஞ்சுகிட்டு இந்த வாய் இல்லைன்னா நீங்க எல்லாம் அப்படின்னு சொல்லி  எமோஜி   மெசேஜ் அனுப்பிட்டு ஒரு குட் நைட் அனுப்பிவிட்டா , இவனும் அத பார்த்துட்டு நாளைக்கு பாக்கலாம் நிலா மேடம்னு அனுப்பிட்டு அவ நம்பர நிலா மேடமுனு சேவ் பண்ணான் கூட ஒரு ஏஞ்சல் சிம்பலும் போட்டான் ஏன் அப்படின்னா பசங்க அவங்களுக்கு புடிச்ச பொண்ணுக்கு மட்டும் தான் அந்த தேவதை என்கிற அந்தஸ்து குடுப்பாங்க அதனால அந்த சிம்பல போட்டு சேவ் பண்ணிக்கிட்டான். இப்படித்தான் ஸ்டார்ட் ஆச்சு இவங்களோட அறிமுகமும் அவங்க காதலுக்கான அடித்தளமும். ரெண்டு பேருக்குமே தெரியும் ரெண்டு பேரையும் நிறைய பிடிக்குமுனு  அதும் பார்த்த அன்னைக்கே, ஆனாலும் காட்டிக்கல இப்படியே ரெண்டு வருஷம் ஓடிச்சு , ரெண்டு பேரும் பேசி பழகி , சுத்தி நிறைய மறக்க முடியாத தருணங்கள்ல சேகரிச்சாங்க. ஒரு நாள் ரெண்டு பேத்துக்குமே தோணிச்சு இது சாதாரண நட்பு மட்டுமல்ல நம்ம இப்ப இருக்கிறது காதல் தானு அதனால ரெண்டு பேருமே முடிவு பண்ணி இத வந்து சொல்லியே ஆகணும்னு இருந்தாங்க .நிலாவுக்கு சர்ப்ரைஸ் தரமாறி நந்தனும் நந்தனுக்கு சப்ரைஸ் தர மாதிரி நிலாவும் சொல்லனும்னு முன்கூட்டியே எதுவும் சொல்லிக்கொள்ளாம ஒரு பரிசு கொடுத்து சொல்லணும்னு முடிவு பண்ணாங்க, பார்த்தீங்களா காதல் சொல்லணும் நினைச்சது கூட ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சிருக்காங்க இதுலயே தெரியலையா அவங்க ரெண்டு பேத்தோட காதல் எந்த மாதிரி அழகானதுனு நிலாவுக்காக நந்தன் கடைக்கு போய் ஒரு தங்க மோதிரத்தை வாங்கிட்டு வந்தான். அது கொடுத்து தான் அவன் நிலா கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு இருந்தான். அந்த ரிங்க்ல என்னனு எழுதிருந்துச்சுனா  "N" போட்டு நிலா சிம்பல் போட்டு இருந்துச்சு அதே மாதிரி வெள்ளியில ஒரு காப்புல நிலா சிம்பல் போட்டு நந்தன் எழுதி நிலா வாங்கி வைச்சிருந்தா,அத கொடுத்து தான் அவளும்  நந்தன் கிட்ட சொல்லனும்னு  இருந்தா.
ரெண்டு பேத்துக்குமே நைட்டு தூக்கம் இல்ல ரெண்டு பேருமே நாளைக்கு என்ன நடக்க போகுது அப்படிங்கறத பத்தியே யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர பொருத்த வரைக்கும் இந்த நாள் ரொம்ப முக்கியமான நாள் அப்படின்னு அவங்க நினைச்சுட்டு இருந்தாங்க, நாளையிலிருந்து நமக்கு தான் அவன் , நமக்குத்தான் அவனு ,  இந்த நாள் ரொம்பவே முக்கியமான, ரொம்ப சந்தோஷமான நாள் நெனச்சிட்டு ரெண்டு பேருமே  வந்தாங்க, அவங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாளாக இருக்கும் நம்புனாங்க ,ஆமா அதே மாதிரி மறக்க முடியாத நாளாக இருந்துச்சு ஆனால் அது சந்தோஷமான நாளா இல்ல சோகமான நாள் இருந்துச்சு. எந்த ஒரு நாள் அவங்க வாழ்க்கையில வந்தா அவங்க வாழ்க்கை மாறும் என்று நம்பினாங்க ஆனா இப்படி மாறுனு நம்பல அவங்க எதிர்பார்க்க கூட இல்லை, அப்படி என்னதான் ஆச்சுன்னு பார்க்கலாம் வாங்க !!
நந்தன் ஆசை, ஆசையா நிலாவுக்கு வாங்கினதை எடுத்துக்கிட்டு ஆபீஸ் கிளம்பி ட்ரெயின்ல வந்துட்டு இருந்தான். நிலாவும் அதே மாதிரி நந்தனுக்கு புடிச்ச மாதிரி கிளம்பி அவனுக்காக வாங்குனதை எடுத்துக்கிட்டு வந்துட்டு இருந்தா, இப்படி ரெண்டு பேருமே மனசுல பல கனவும் ஆசையும் கலந்து  அவங்க காதல் வாழ்க்கையை தொடங்கி விடுவோம் அப்படின்னு நினைச்சுகிட்டு வந்துட்டு இருந்தாங்க, ரெண்டு பேருமே ஆபீஸ் வந்துட்டாங்க நேருக்கு நேர் நடந்து வந்துட்டு இருந்தாங்க அங்க இருந்து நந்தன் நிலாவுக்கு ஹாய் என்று காட்டினான். இங்கிருந்து நிலாவும் ஹாய் நந்தன் அப்படின்னு காட்டினா, பக்கத்துல வந்துட்டு இருந்தாங்க  ரெண்டு பேரும் சரி நேருக்கு நேரா சொல்லிடலாம் மனசுல நினைச்சுக்கிட்டே வந்தாங்க அப்பதான் அவங்களுக்கு ஒரு சோகமான செய்தி காத்திட்டு இருந்துச்சு .
ஆபீஸ்க்கு உள்ள வந்தவுடனே சொன்னாங்க ஆமா ரொம்ப சோகமான‌ விசியத்த சொன்னாங்க அமர்,ரியா  இறந்துட்டாங்க அப்படின்னு,  யார் இந்த அமர் ரியா சொல்றேன் கேளுங்க அமர், ரியா நந்தன் நம்ம நிலா நாலு பேருமே மிகச் சிறந்த நண்பர்கள் அதுல அமரும் ரியாவும் காதலிச்சிட்டு இருந்தாங்க ஒரு நாலு வருஷமா, அவங்க ரெண்டு பேரையுமே பார்த்தா காதலிக்காதவங்க  கூட காதலிச்சிருவாங்க அப்படி ஒரு அழகான காதல் வாழ்க்கை அமருக்கும் ரியாக்கும் இடையிலே இருந்துச்சு .
ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியல அதிக அன்பு வச்சதுனாலயா என்னன்னு புரியல ரியாவுக்கும் அமருக்கும் நிறைய சண்டை வந்துகிட்டே இருக்கும் அத நிலாவும் நந்தனம் தான் தீர்த்து வைப்பாங்க. அப்படி ஒரு சண்டை வந்தது  நேத்து அவங்க வீட்டுக்கு போனாங்க , சரி இது தினமும் இருக்கறத போல சண்ட மாறி தான் அப்படி நினைச்சுட்டு நிலா நந்தனம் அவங்கள விட்டுட்டு போயிட்டாங்க. ஆனா இந்த "Posseiveness" அப்படிங்கிற காரணத்துனால ரியாவுக்கு அமர் மேல சந்தேகம் வந்துச்சு அதே மாதிரி அமெரிக்கும் ரியா மேல சந்தேகம் வந்துச்சு இவங்களோட வாக்குவாதம் பெரிய மோதலா மாறி ரியா தற்கொலை பண்ணிக்கிட்டா, ரியா இறந்தத தாங்காம அமரும் இறந்துட்டான். இதைக் கேட்டதும் நிலாவுக்கு நந்நனுக்கு ஒன்னும் புரியல இந்த காதல் அழகான வாழ்க்கையை தரும் அன்பான  இரண்டு இதயத்தையும் ஒன்று சேர்க்கும் இது ரொம்ப அழகானதுன்னு நம்பிகிட்டு இருந்தான் நம்ம நந்தன் அதுக்கு காரணமும் அமர் ரியாதான் இவங்கள மாதிரியே நம்மளும் நிலா கூட இருக்கணும் அப்படி நினைச்சுட்டு இருந்தான் ஆனா காதல் அழிவையும் தரும், கஷ்டத்தையும் தரும், வலியும் தரும் அழுகையும் தரும் ,அப்படிங்கறது, அவனுக்கு நினைவூட்டுனதும் நம்ம அமர், ரியா தான் .எங்க நம்ம காதலை சொல்லி நம்மளும் இப்படி நல்லா ஜாலியா காதல் பண்ணிட்டு ஏதோ ஒரு பிரச்சனை , தேவையில்லாத சந்தேகம் வந்து நிலாவ நானே கொன்றுவேன் அப்படிங்கிற பயத்துல நந்தன் நிலா கிட்ட அவன் காதல சொல்ல கூடாதுன்னு நினைச்சான். நிலாவுக்கும் அந்த அதிர்ச்சி இருந்துச்சு அமரும் ரியாவும் இறந்துட்டாங்க அப்படிங்கறது ஆனா அவ நந்தன் மாதிரி யோசிக்கல ஏன்னா எல்லாரோட வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி அதே மாதிரி தான் எல்லாரோட காதல் நினைச்சா, என்ன இன்னைக்கு என்னால நந்தன் கிட்ட என்னோட காதலை சொல்ல முடியல ஆனா இன்னும் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் நான் சொல்லுவேன் அப்படின்னு அவ மனசுல நினைச்சுட்டு அவளும் வேலையை பார்க்க ஆரம்பிச்சா, அவனும் வேலைய பார்க்க ஆரம்பிச்சான் ஆனா நந்தனால வேலை பார்க்க முடியல . நந்நன் ஒரு முடிவு பண்ணா அது என்ன அப்படின்னா நிலாவுக்கு நான் என் காதல சொல்லி அவளை கஷ்டப்படுத்தக் கூடாது என்னால அவள் உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது அவள் எங்கு
இருந்தாலும் நல்லாயிருக்கனும் எல்லாமே நடக்கனும். என் காதல சொல்லாம இருந்தா அவ உயிரோடு இருப்பானா, நான் சொல்ல மாட்டேனு முடிவு பண்ணி அன்னையிலிருந்து நம்ம நிலாவை இவன் ஒதுக்க ஆரம்பிச்சான். அவளை விட்டு தள்ளி தூரமா போனா .நிலா, அமர் இப்படி இறந்து போனதுனால தான் இப்படி இருக்கான் கொஞ்ச நாள்ல சரியா ஆயிடுவான்னு நினைச்சுட்டு இருந்தா. ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அவனால பொறுக்க முடியல நந்தன் கிட்ட சொன்னா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் அப்படின்னு ,நந்தன் சரிவரேனு நிலா கிட்ட சொன்னா ஆனா நிலாவ பாக்க போகல அவன் அவளை விட்டு ரொம்ப தூரமா இருக்கணும்னு நினைச்சா . எங்க அவன் போய் பேசினா  நிழா கிட்ட அவன் பழைய மாதிரி ஆயிடுவேனோனு  நந்தன் பயந்துட்டான் ,அதனால அவன் நிலா கிட்ட பேசல சொல்லாம போயிட்டான். இப்படியே போயிட்டே இருந்துச்சு ஒரு ஆறு மாதத்துக்கு நிலாவால பொறுத்துக்க முடியல வேகமா நந்தன் கிட்ட போயி நீ என்ன நினைச்சுட்டு இருக்க நந்தன் உனக்கு என்ன தெரியும் எல்லாருடைய காதலும் ஒரே மாதிரி கிடையாது அவங்க தப்பான முடிவெடுத்தது மாறி கிடையாது .இங்க பாரு நீ  தேவையில்லாத குழப்பத்துல இருக்க இப்ப மட்டும் இல்ல எப்பவும் நான் உனக்காக இருப்பேன், உனக்காக மட்டும் தான் இருப்பேன்னு சொல்லி அவன் கிட்ட பேசி கத்தி திட்டி நந்தன் இன்னிக்கி மட்டும் இல்ல எப்பவுமே உனக்காக இந்த நிலா இருப்பா அப்படின்னு சொல்லிட்டு அவ வாங்கின காப்ப எடுத்து கையில போட்டுட்டா. இந்த காப்ப நீ கழட்டவே கூடாது. இனிமேல் நான் உன்னை  தொந்தரவு பண்ண மாட்டேன் உனக்கு எப்ப வந்து இந்த நிலா வேணும்னு நினைக்கிறாயோ அப்ப வந்து என்கிட்ட பேசணும்னு சொல்லி போயிட்டா. அன்னைக்கு போன நிலா தான் இன்னைக்கு வருசம் ஏழாச்சு. இன்னும் ஒரு தடவை கூட நம்ம நந்தன் கிட்ட வந்து என் கூட பேசணும் கேக்கல , நந்தன வந்து அவ தொந்தரவும் பண்ணல அதுக்காக நந்தன கண்டுக்காம இல்ல அவனுக்கு என்ன எல்லாம் அவ பண்ண முடியுமோ அதெல்லாம் மறைமுகமா பண்ணா. ஆனாலும் நந்தனனால இதெல்லாம் ஏத்துக்க முடியல அவனால அமர் ரியாக்கு நடந்த விஷயத்தை மறக்க முடியல அதே மாதிரி அவங்களுக்கும் நடந்துரும்னு நினைச்சான் அதனாலேயே அவன் நிலாவிட்டு ரொம்ப தூரமா இருந்தான், இதுதான் காரணம்  நந்தன் நிலாவ விட்டு பிரிஞ்சு இருக்குறதுக்கு, நந்தனம் சரி நிலவும் சரி ஏழு வருஷம் ஆயிடுச்சு அவங்க காதுல சொல்லிக்கல ஆனாலும் அவங்க ஒருத்தர் சொல்லிக்காமல் காதலிச்சுட்டு தான் இருக்காங்க. அவ நல்லா இருக்கணும்னு இவன் விலகி இருக்கான், அவனும் நல்லா இருக்கணும் இங்க இவ விலகி இருக்கா, இவங்க காதல் எப்படி சேர்ந்தது என்பதை பார்க்கலாம் வாங்க .இன்னிக்கு நிலாவோட பிறந்தநாள் இந்த ஏழு வருஷத்துல ஒவ்வொரு வருஷமும் நிலாவோட பிறந்தநாள் அன்று கோயிலுக்கு போயி என் தேவதை அந்த நிலாவ விட அழகான நிலாவுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு சொல்லி அந்த சாமிகிட்ட வேண்டிக்கவா ஆனா என்னைக்கும் ஆபீஸ் போக மாட்டான் போனால் நிலவை பார்க்கணும் அவ பிறந்த நாள் அன்னைக்கு என்னால பேசாம இருக்க முடியாது. அவள் நான் ஏதாச்சும் சொல்லுவேனு  எதிர்பார்ப்பா நான் எதுவும் சொல்லலைன்னா அவ கஷ்டப்படுவா அதனால இப்ப நான் போகப்போவதில்லை என்று ஒவ்வொரு வருஷமும் போக மாட்டான். ஆனால் இந்த வருஷம் அவன் ஆபீஸ் போக வேண்டிய கட்டாயம் எந்த வருஷமும் நந்தன் அவளுக்கு வாழ்தது  சொல்ல மாட்டான்,நந்தன் ஆபீஸ் வர மாட்டான் , அவன்கிட்ட இருந்து எந்த ஒரு வாழ்த்து வந்ததில்ல அப்படிங்கிறதினால நிலா வந்து அவங்க கிட்ட எதுவுமே எதிர்பார்க்கல இன்னைக்கு அவன் வருவான் கூட அவ எதிர்பார்க்கல எப்பவும் போல ஆபிஸ் கிளம்பி போனா அவ போனதும் எல்லாரும் வாழ்த்து சொன்னாங்க அங்க போன உடனே அவளுக்கு  அதர்ச்சியா இருந்துச்சு அவ சீட்டுக்கு போகும்போது பக்கத்துல நந்தன் இருந்தது. ஆனாலும் அவ எதும் எதிர்பார்க்கல ஏன்னா அவளுக்கு தெரியும் எதிர்பார்க்கிறது எதுவும் நடக்காதுன்னு .அதனால எப்பவும் போல வேலை பார்த்துட்டு இருந்தா நந்தனுக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு நிலா கிட்ட பேசியே ஆகணும்னு  இருந்துச்சு. நிலாக்கு  ஒரு வாழ்த்து சொல்லணும்னு  இருந்துச்சு எப்படி சொல்றதுன்னு  நந்தனுக்கு தெரியல யோசிச்சுக்கிட்டே இருந்தான், நம்ம நிலாவிற்காக வாங்குனது அந்த ரிங் அவனோட லாக்கர் குள்ளயே ரொம்ப வருஷமா தூங்கிட்டு இருந்துச்சு அவன் எப்பயாச்சும் அதை எடுத்து பார்த்துகிட்டு இருப்பான் உடனே அவன் ஒரு முடிவு பண்ணா இது சும்மா தூங்குறதுக்கு நிலாவை காது கொடுத்துடலாம் இதை கொடுத்து நம்ம அவளுக்கு வாழ்த்து சொல்லிடலாம் என்று நினைத்து நிலா அப்படின்னு மெல்லமா கூப்பிட்டான் நிலா திரும்பல நிலா அப்படின்னு மெல்லமா கூப்பிட்டான் அப்பயும் நிலா திரும்பல சரி உள்ள இருக்கிறதை எடுப்போம் சொல்லி தேடி எடுத்தான் ஆனா அந்த  லாக்கர் குள்ள ஒண்ணுமே இல்ல அவன் தேடிக்கிட்டே இருந்தான், அவனுக்கு  பதட்டமாக ஆயிடுச்சு, வச்சது எங்க காணாமே அப்படின்னு, ரொம்ப அவ மனசு உடைஞ்சு போயிட்டான். எனக்கு எதுக்குமே கொடுத்து வைக்கல நிலா என்னை மன்னிச்சிடு உன் கூட எப்பவுமே என்னால இருக்க முடியாது நிலா ,நான் உனக்கு   இல்ல,நிலா நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் நிலவு தேவதையேனு மனசுக்குள்ளயே சொல்லிட்டு அவன் அங்க இருந்து எந்திரிச்சு போனா, அப்போ நீலா அவன் கைய புடிச்சுட்டு நந்தன் சார் இதை தான நீங்க தேடுறீங்கன்னு எடுத்துக் காட்டுனா, நந்தனுக்கு ஒன்னும் புரியல இது எப்படி உன் கையிலனு கேட்டான், ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு பைல் எடுக்க சொல்லி டீம் லீடர் அனுப்புனாரு. நீ லீவு அன்னிக்கு, உங்க லாக்கர் திறக்கும் போது இது இருந்துச்சு இதுல எனக்காக பிறந்த என் நிலாவிற்கு இது!! அப்படின்னு இருந்துச்சு அதனால தான் நான் எடுத்துகிட்டேன். எப்படியும் நீ எனக்கு பதில் சொல்ல மாட்ட , உன் வாழ்க்கையில சேர்த்துக்க மாட்டேனு எனக்கு தெரியும் , அதான் பிறந்தநாள் அன்னைக்கு போட்டுக்கலாம்னு அட்லீஸ்ட் இதுவாது என்கூட சாகுற வரைக்கும் இருக்கும், இது கூடவே நான் இருந்தெல்லாம் நினைச்சு தான் எடுத்துக்கிட்டேன் சொன்னா, அப்போ நந்தன் நிலா கிட்ட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் நிலா அப்படின்னு சொன்னான், நிலாவும் உனக்கு, எனக்கு வாழ்த்து சொல்லலாம் தெரியுமா இந்த வார்த்தை கேட்க நான் எவ்ளோ நாள் காத்திருந்தேன் உனக்கு தெரியுமா அப்படின்னு சொல்லிட்டு இருந்தா அப்பதான் நிலா வந்து நந்தன் கிட்ட ஒரு நிமிஷம் இரு நீ என் நிலானா சொன்ன அப்படின்னு சொல்லி கேட்க ஆமா இப்போதைக்கு எனக்காக பிறந்தவ நீ அதனால என் நிலா சொன்னேன் நாளைக்கு நான் உன் கழுத்துல தாலி கட்டிட்டா  அப்போ உன்னோட இன்சியல் "N"தானே, எடுத்துக்கோ அப்படின்னு சொல்ல நிலாவுக்கு கை கால் புரியல நீ பிறந்தநாள் பரிசா  உன் காதலை சொல்லிட்டியா நந்தன் அப்படின்னு சொல்லி கேட்டா அப்பவும் இல்ல நான் உன் நந்நன் இல்ல உன்னோட பொறுக்கி டி அம்மு அப்படின்னு அவன் சொன்னான் ,நிலாவுக்கு ஒன்னும் புரியல அழுக ஆரம்பிச்சிட்டா , நந்தன் நான் செஞ்சதெல்லாம் தப்புதான்  நிலா உன்னை இத்தனை நாளா நான் தனியா தவிக்க விட்டுட்டேன். எல்லாருக்கும் நடக்குற மாதிரியே நமக்கும் நடந்துரும்னு நான் நினைச்சிட்டேன். அமர் மாதிரியே நம்ம வாழ்க்கையில நடந்துருமோ என்று நான் நினைச்சிட்டேன் அதனாலதான் நீ என்னால செத்துற கூடாதுன்னு நான் நினைச்சேன் நீ உயிரோட நல்லா இருக்கணும் அப்படிங்கறதுனால தான் உங்ககிட்ட தள்ளி இருந்தேன் நிலா அப்படின்னு சொல்லி நிலா  கால புடிச்சு அழுதான். நிலாவுக்கு என்ன சொல்றதுனே தெரியல அவன் கால புடிச்சதும் அவளுக்கு ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமாயிடுச்சு ஆனாலும் அவன் கிட்ட அவ எழுந்திருடா பொறுக்கி இப்ப வந்து இருக்க கால பிடிக்கிற போ என்கிட்ட பேசாத அப்படின்னு சொல்ல அம்மு உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல அம்மு  அப்படினு நந்தன் சொன்னா உடனே நிலா நந்தன மேல தூக்கி இவ்வளவு நாள் என்ன தவிக்க விட்டல அதுக்கு பதிலா இனிமேல் நீ என் கூடவே இருக்கணும் சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு சொன்னா .
அப்போ அந்த மோதிரத்தை எடுத்து நிலாவோட கையில போட்டு இந்த மோதிரம் உன் வாழ்க்கையில நீ எப்பவுமே  கலட்ட கூடாது நிலா ஐ லவ் யூ டி அம்மு!! உன் கூட நான் எப்பவுமே இருப்பேன் அப்படின்னு சொல்லி போட்டுவிட்டு அவ  நெத்தில ஒரு முத்தம் கொடுத்தான் .அது நிலாவுக்கு ரொம்ப அழுகையை கொடுத்துருச்சு, அந்த அழுகையா மட்டும் இல்லாம அவளும் அவ காதல பரிமாறனும் அல்லவா, அவன் கையில போட்டு விட்ட காப்பு கைய புடிச்சு எப்பவுமே இந்த கைய நான் விட்டுற கூடாது இந்த கை என்ன விட்டு போயிடக்கூடாது டா பொறுக்கி அப்படின்னு சொல்லி கைய புடிச்சுக்கிட்டா ரெண்டு பேரும் அப்புறம் சேர்ந்துட்டாங்க அப்பாடா எப்படியோ இந்த ஜோடி சேர்ந்திருச்சு இவ்வளவு தாங்க காதல், நம்ம எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும் என்ன திருப்பி ஆசை சொல்றேன் நினைக்காதீங்க அதுதான் நமக்காக ஒருத்தர் இருக்கணும் நம்ம ஆசைப்படுவோம் அதே மாதிரி இருக்கணும்னு அவங்க ஆசைப்படுவாங்குறதுனு நம்ம மறந்திடறோம். இந்த காதல்ல அவங்களால இவங்கநாளல  தான் பிரச்சனைகள் அதிகம் வரும் அதனால, நீங்க ரெண்டு பேரும் மட்டும்  காதல் பயணத்துல சேர்ந்து பயணிச்சீங்க அப்படின்னா உங்க வாழ்க்கையில எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த Posseiveness  எல்லாமே ஒரு சின்ன டாட்டு தான் உங்க வாழ்க்கையில ,இத புரிஞ்சு நடந்துக்கோங்க நம்ம நந்தன் நிலா சேர்ந்த மாதிரி நீங்களும் உங்க வாழ்க்கையில இருக்க நந்தன் / நிலா கூட ரொம்ப சந்தோஷமா இருக்கணும்னு இந்த கதையை முலியுமா நான் சொல்லி கதையை முடிக்கிறேன்.

Friday, October 14, 2022

கசக்கும்!!

காதலும் கசக்கதான் செய்கிறது
உன்னை காணாமல் காத்திருக்கும் தருவாயில்!!