Tuesday, December 27, 2022

சொல்லி போ!!

இன்று ஒரு நாள்
 மட்டும் நான் 
உனதென்று 
பொய் சொல்லிப்போ ??
இன்றோடு நிற்க்கட்டும்
உனக்காக துடிக்கும் 
இதயம் மெய் 
என்று நம்பி!!




Monday, December 26, 2022

நெற்றி முத்தம்!!

காதல் முத்தம் 
வேண்டும்!!
ஆமாம் 
இமை மூடி
இதழ் உரசி 
வேண்டாம்
இனி உன்னில்
நான் பாதி 
என்று கூறி
 நெற்றி 
முத்தம் தா !!!

Thursday, December 22, 2022

உனை பிரியா வரம் வேண்டும்!!

இனைபிரியா வரம்
வேண்டும் என்று 
எழுத முடிவு செய்து 
உனைபிரியா வரம்
வேண்டும் என்று 
எழுதிமுடித்தேன்!!!



தூக்கமும் ஏக்கமும்!!

தூக்கமும் ஏக்கமும் ஒன்றாகவே வருகிறது 
தூங்கச் சொல்லி என் கண்களும்!!
பேசச் சொல்லி உன் கண்களும்!!

Friday, December 16, 2022

வேண்டிய நீ

வேறேதும் 
வேண்டாம்
வேண்டிய 
நீ போதும்
என்று வேண்டாத 
தெய்வம் அல்ல
உன்னை 
எனதாகிகொள்ள!!

உதட்டோர சிரிப்பு

உதட்டோர 
சிரிப்பும் 
உச்சு கொட்டுகிறது
உன்னால் 
சிரிக்காத போது!!

காதல் சுவாசம்

வீசும் காற்றிடம்
விலாசம் சொல்லி 
அனுப்புகிறேன்
உன்மீது வீசுகையில்
மட்டும் 
என் சுவாசம் வீச!!

Monday, December 12, 2022

மோதிரம் 💍

கைகோர்த்து நடக்கையில் 
உன் விரலோடு இருக்கும்
மோதிரம் எனக்கு தான் 
நீ என்று மோதுகிறது
என்றால் அவள் !!
நான் என்ன செய்ய 
அவள்  போட்ட மோதிரம் அவளோடே 
மோதினால்? - என்றான் அவன் !!
இது தான் மோதலில் காதலா???



Monday, December 5, 2022

காதல் கல்யாணம்

காதலும் கடந்து போகும்
ஒப்புக்கொண்டேன்
கல்யாணத்திற்கு கடந்து
சென்றவுடன்!!!