Monday, July 13, 2020

தனிமை என்ன செய்யும்

எதுவும் இல்லாமல்      
இருந்தது பாருங்கள் 
தனிமை புரியும் என்று 
சிலர் விரக்தியில் கூறினார்கள்
ஆனால் தனிமை அது அல்ல
அனைத்தும் இருந்தும் 
இல்லாதது போல் இருப்பது தான்
உண்மையில் தனிமை என்று 
நான் உணர்கிறேன்
மனதிற்குப் பிடித்தவர்கள் 
பிரிந்து செல்வதா தனிமை?
கிடையாது !!!
உடன் இருந்த உள்ளத்தை 
உணராமல் இருக்கும் போது 
ஏற்படும் வெளிக்காட்ட முடியாத
உள் உணர்வே தனிமை !!
அதனால் தனியாக இருப்பது தனிமை இல்லை
தனித்துவிடுவதும் தனிமை இல்லை
இதை புரிந்து கொள்ளுங்கள் 
அதுவே போதும்...
தனிமை ஒன்றும் தவறில்லை
தனிமை தான் ஒருவனுக்கு
சிறந்த ஆசான்
அவனை அவனாக மட்டும் 
உணர வைத்து
மாறுதலை உண்டாக்கும்


5 comments:

  1. முற்றிலும் உண்மை லட்சுமிபிரியா. தனிமையை விட சிறந்ததும் இல்லை. அதை நமக்கு அறிமுகப்படுத்துவே நாம் நேசித்தவரின் நினைவு தானே..

    அருமை..

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டும்

      Delete
  2. Thanimai pala unmaigali namaku poriya vaikum thanimaiyaga irrupadu kastam tan annala thanimai palagikondal thanimai miga alaganadagum en endral thanimaiyil irrukum podu namai kayapaduta yarum irruka mattaga😂

    ReplyDelete
  3. Yanaku Intha Line Romba Romba Romba Pudichu iruku

    ReplyDelete