Friday, November 25, 2022

தொலைத்தூர காதல்!!

நேற்று வரை
தள்ளி இருந்த
தூரம் போதும்!!
உற்று உற்று
தொலைபேசியில்
உன்னை
பார்த்தது
 போதும்!!
சந்திக்கும் 
நாளை 
எண்ணி 
எண்ணி
தவித்தது 
போதும்!!
எப்போது 
வருவாய் 
என்ற
புலம்பல் 
போதும்!!
மறைத்து
மறைத்து
அனுப்பிய
குறுஞ்செய்தி
போதும்!!
போதும் 
எல்லாம் 
போதும் !!
காசு வேண்டாம்
காதல் போதும் !!
காதிற்கு கம்மல்
வேண்டாம்
கைக்கோர்க்க 
உன் கைகள்
போதும்!!!
போதும் 
எனக்கு 
நீ போதும் 
எப்போதும் !!
கிளம்பிவா 
என்றும் 
உனக்காக
நான்
என்கிறது
இந்த 
தொலைத்தூர காதல்!!








No comments:

Post a Comment