Saturday, January 21, 2023

கைக்கூடா காதல்

கைக்கூடா 
காதல் கூட‌ 
அழகாக தான் 
இருக்கிறது
களவாட வாய்ப்பு 
இருந்தும் 
கண்களில் மட்டும்
பரித்தவிக்கின்ற பொழுது !!!

Friday, January 20, 2023

எது தவறு !!!

உன்னை 
காண 
கால்கடுக்க
நான்
நிற்பது 
தவறா??
இல்லை 
திரும்பாது 
நீ செல்வது 
தவறா ??


ஒருதலைக் காதல்!!

உன்னோடு எனக்கு
காதலும் வேண்டாம்,
காதலில் வரும் 
மோதலும் வேண்டாம்,
உன்னை கானும்
போதெல்லாம்
எனக்குள் தோன்றும்
 அந்த ஊடல் போதும்
 என்றே வாழ்கிறது 
இங்கு பலரின் 
ஒருதலைக் காதல்!!

Thursday, January 19, 2023

என் இலக்கணமே!!

என் இல்லத்தரசியே
உன்னை பற்றி 
இலக்கணம் 
வேண்டுமா ??
நீயே என்  வாழ்வின் 
இலக்கணமாக 
இருக்கையில் !!

Thursday, January 12, 2023

அவ்வளவே!!

அன்றைக்கும் இன்றைக்கும்
சிறு வித்தியாசம் தான்
அன்று என் இதயத்தை 
கொண்டு சென்றாய் !!
இன்று என்று இதயத்தை
கொன்று செல்கிறாய் !!
அவ்வளவே!!

பெண்ணே!!

பெண்னென பிறந்தமைக்கு பெருமைக் கொள் !!

Tuesday, January 10, 2023

வெற்றி நிச்சயம்!!

 வெற்றி நிச்சயம் ஒரு நாள்
 உன் பக்கமும் வீசும் !!! 
 நம்பு நீயும் ஜெய்த்திடுவாய் என்று!!