பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Sunday, September 25, 2022
சந்தேகம்
நான் செய்யும்
சந்திகளை
எல்லாம்
திருத்த
தேகத்துள்
வந்தவள், அவள் !!
அதனால் தான்
என்னை சந்தேகிக்கின்றாள்!!!
இல்லை
அன்று போல் இன்று இல்லை
என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாதென்று இருந்தேன்
ஆனால் அன்று போல் இனி என்றும் இல்லை என்று பயன்படுத்த வைத்து விட்டாய்!!
ஆசை நீ!!
அவள் ஆசை நீ
என்பதை
எப்படி மறந்தாய்!!
விலக முடியாமல்
விட்டுச் செல்லவும் முடியாமல்
விலகி நிக்கவும் முடியாமல்
கண்களில் கண்ணீரோடு
தத்தளித்தே செல்கிறது
இங்கு பலரின் காதல்!!
‹
›
Home
View web version