பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Sunday, August 28, 2022
புரியாத காதலின் மகிமை!!
இதுவென்ன புரியாத
இந்த காதலின் மகிமை??
தொலை தூரம்
இருந்த போது
இல்லாத
இந்த தனிமை
தொடும் தூரத்தில்
நீ இருந்தும்
வாட்டுகிறதே!!
தலையெழுத்தே!!
எத்தனை முறை
எட்டி குத்திதாலும்
உன்னை விட்டு போக
முடியவில்லை காரணம்
எழுத்தாகிய நீயே என் தலையெழுத்து என்பதால்!!
Saturday, August 27, 2022
அவனே!!
ஆயிரம் கோடி
ரூபாய்
கொடுத்தாலும்
அவனற்ற
கவிதைகளை
எழுத
போடி
என வர
மறுக்கிறது
என் வார்த்தைகள்!!
Thursday, August 18, 2022
சிரி
இன்பத்தில்
சிரிப்பவனைவிட
இங்கு இன்னல்களின்
இடையே சிரிப்பவனே
அதிகம் அதனால் தான்
இன்றும் இதயங்கள்
துடிக்கொண்டு இருக்கிறது!!
Tuesday, August 16, 2022
சண்டையில் காதல்
கொஞ்சும் நீ
மீஞ்சும் நான்!!
நம்மை காதலிக்க !!
சொல்லி கெஞ்சுகிறது
இந்த காதல்
நாம் போடும்
ஒவ்வொரு
சண்டையிலும்!!
Saturday, August 6, 2022
பெண்ணும் பேனாவும்!!
பெண்ணான நானும்
பேனாவாகிய நீயும்
இனைந்தது எழுத்தால் !!
அதனால்
இனைந்து எழுதுவோமா ??
இறக்கும் வரை
பிறக்கின்ற சொற்களை
வாசகர்கள் வாசிக்கும்
வரிகளாக!!
‹
›
Home
View web version