பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Thursday, July 28, 2022
பெறவே
உயிர் பெற நினைக்கின்றது
இறந்த காலத்தில்
நீ அனுப்பிய அத்தனை
குறுஞ்செய்திகளும்!!
மௌனம்
உனக்கும் எனக்கும்
நடுவில் அதிகம்
பேசப்படும் மொழி
மௌனம்!!
Wednesday, July 27, 2022
நீயே
திரும்பும்
திசையெல்லாம்
நீ இருக்க ஆசை!!
தங்க மயில்
தோகை இல்லாமல்
பறக்கிறேன் !!
நகை இல்லாமல்
ஜொலிக்கிறேன்!!
ஒவ்வொரு முறையும்
நீ குறுஞ்செய்தியில்
தங்க மயில் என்கிறபோது!!
எண்ணமே!!
எண்ணம் போல் வாழ்க்கை என்கிறார்கள்!!
என் எண்ணமாக நீ இருக்கின்றாய்
அப்போது உன்னைப் போல்
என் வாழ்க்கையையும் அழகாக இருக்குமா??
Saturday, July 9, 2022
தவறாதே!!
தவறியும்
தவறாக நடக்காதே
தவறும் போதெல்லாம்
தாங்கி நிற்பது
தாரம் மட்டுமே!!
Saturday, July 2, 2022
கட்டியனைத்திடுவேனோ!!
உன்னோடு உரையாடும் போதெல்லாம்
தன்னை மறந்து கைக்கட்டிக் கொள்கிறேன்!!
காரணம் கட்டாமல் இருந்தால்
உன்னை கட்டியனைத்திடுவேனோ
என்ற பயத்தில்!!
‹
›
Home
View web version